கால் நூற்றாண்டுக்கு முன்பு தனக்கான புதிய பாதையை அமைத்தவர், இன்று தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் உலக சினிமாவுக்கே புதிய பாதை அமைத்துள்ளார்.

சிங்கிள் ஷாட் திரைப்படம் என்பது இதுவரை யாரும் செய்யாத முயற்சி இல்லை என்றாலும், பார்த்திபன் செய்திருப்பது உலகின் முதல் முயற்சி. மிக நீளமான ஒரே ஷாட் என்ற வகையில் இதுவரை சிங்கிள் ஷாட் படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் பார்த்திபன் கையில் எடுத்திருக்கும் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் உண்மையிலேயே புதிய முயற்சி.

தான் செய்யப்போகும் முக்கியமான விசயங்களுக்கு முன்பாக, தன் வாழ்வில் நடந்த சில விசயங்களை அசைபோடும் நபரின் கதைதான் இரவின் நிழல். நந்து என்ற மைய பாத்திரத்தில் நடித்துள்ளார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன். பவி டீச்சராக நடித்து ரசிகர்களிடம் புகழ்பெற்ற பிரிகிடா சகா, சினேகா குமாரி, சாய் பிரியங்கா ரூத் என மூன்று நாயகிகள். இதில் பிரகிடாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை அறிந்து நடித்து பாராட்டுக்களை அள்ளிக்கொள்கிறார் பிரகிடா. சந்துரு, ஜோஸ்வா, பிரவீன் குமார் என பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் போன்ற சீனியர் நடிகர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.

இவ்வளவு காதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சிங்கிள் ஷாட் படம் அதுவும் நான் லீனியர் எடுத்திருப்பது உலகசாதனை. நிச்சயமாக பல விருதுகள் பார்த்திபன் அவர்களுக்கு காத்திருக்கிறது. செட்,செட், செட்டுக்குள் செட் என, படத்தின் எடையை தாங்குவதற்காக பார்த்திபனுக்கு தன் தோள்களை கொடுத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் ஆர் கே விஜய் முருகன். படத்தின் இரண்டாவது ஹீரோ ஒளிப்பதிவாளர் ஆர்தர் A. வில்சன் என்று சொல்லுமளவுக்கு அவர் கேமிராவில் விளையாடி இருக்கிறார். ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் மதிமயக்குமளவுக்கு நம்மை கட்டிப்போடுகின்றன.

பார்த்திபன் என்ற கலைஞனும் அவரின் குழுவும் ஓயாது உழைத்து இரவின் நிழலை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். கொண்டாட வேண்டியது நம் கடமை.


இரவின் நிழல் கதாபாத்திரம் – நடிகர்கள்

நந்து : இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
பிரேமகுமாரி : வரலக்ஷ்மி சரத்குமார்
பரமானந்தா : ரோபோ ஷங்கர்
சிலக்கம்மா : பிரிகிடா சகா
18 வயது நந்து : சந்துரு
30 வயது நந்து : ஆனந்த கிருஷ்ணன்
லட்சுமி : சினேகா குமார்
பார்வதி : சாய் பிரியங்கா ரூத்

படக்குழுவினர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

இசை – ஏ ஆர் ரஹ்மான் (அகாடமி விருது வென்றவர்)

தயாரிப்பு – பயாஸ்கோப் USA, அகிரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்.

தயாரிப்பாளர்கள் – கால்டுவேல் வேல்நம்பி , அன்ஷு பிரபாகர் , Dr.பாலா ஸ்வாமிநாதன் , Dr. பிஞ்சி ஸ்ரீனிவாசன் , ரஞ்சித் தண்டபாணி , கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி & இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

நிர்வாக தயாரிப்பாளர் – ராக்கி பார்த்திபன்
ஒளிப்பதிவு இயக்குனர் – ஆர்தர் A. வில்சன்
கலை இயக்குனர் – ஆர் கே விஜய் முருகன்
ஒலிக்கலவை – எஸ். சிவக்குமார்
இணை இயக்குனர் – P.கிருஷ்ணமூர்த்தி
பாடல் வரிகள் – கடுவெளி சித்தர் , மதன் கார்க்கி, ராக்கெண்டு மௌலி, & இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
VFX மேற்பார்வையாளர் – கொட்டலங்கோ லியோன் (அகாடமி விருது வென்றவர்)
ஒலி தொகுப்பு மேற்பார்வை – கிரேக் மேன் (அகாடமி விருது வென்றவர்)
ஒலி வடிவமைப்பு மேற்பார்வை – குணால் ராஜன்
லைன் புரொடியூசர் – ஜே பிரபாகர்
கிம்பல் ஆப்ரேட்டர் – A.K.ஆகாஷ்
Focus Pullers – ஷங்கர் (டிசோஸா ), ராஜேஷ்
நடன இயக்கம் – ஷாந்தி குமார் , பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here