மார்வல் படங்களின் சூப்பர் ஹீரோக்களில்,  சூப்பர் இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தி க்ரே மேன். எப்போதும் உலகுக்கு நன்மை மட்டுமே செய்யும் சூப்பர் ஹீரோக்களை நாயகர்களாக வைத்து படம் இயக்கி வந்த ரூசோ சகோதரர்கள் இம்முறை நான் கெட்டவன், நான் அதவிட கெட்டவன் என்ற இரண்டு வில்லன்களை நாயகர்கள் பாத்திரங்களாக களமிறக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளை சரிக்கட்ட ராயன் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரை மோதவிடுகிறார்கள். தவறை மறைக்க மேலும் தவறு என்ற ரீதியில் சிஐஏ செய்யும் தவறுகளால் ராயன் கிறிஸ் மோதல் கொடூர கட்டத்தை அடைகிறது. இந்த மோதலின் முடிவு என்ன என்பதே தி க்ரே மேன் படத்தின் கதை.

ஹாலிவுட் படம், மார்வல் படத்தின் இயக்குனர்கள் என்று பல விசயங்கள் இருந்தாலும், இப்படத்தை தமிழ்நாட்டு ரசிகர்கள் தேடித்தேடி பார்ப்பதற்கும், நெஞ்சை நிமிர்த்தி கௌரவப்பட்டுக் கொள்வதற்கும் இருக்கும் ஒரே காரணம் தனுஷ். தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பது தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே தெரியும், தற்போது உலகத்துக்கே தெரிய வந்திருக்கிறது. தனுஷ் வரும் சண்டை காட்சிகள் அதிரடியாக இருக்கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும், சிறப்பாக நடித்திருக்கிறார் நம் ஆள் தனுஷ்.

படம் முழுக்க ஆக்சன், அதிரடி சண்டைகாட்சிகள்தான். ஆக்சன் பட ரசிகர்களுக்கு சரியான தீனியாக இப்படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தி க்ரே மேன் அதிரடி ஆக்சன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here