வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வந்த சந்தானம், திடீரென நாயகனாக மட்டுமே நடிக்கப்போவதாக சொன்ன போது, ரசிகர்கள் அதிர்ந்தது உண்மை, இவருக்கு எதற்கு ஹீரோ வேஷம் என்று கிண்டல் செய்தவர்களும் உண்டு. ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னை ஒரு வெற்றிகரமான ஹீரோ என்பதை நிலை நிறுத்தி இருக்கிறார் சந்தானம். குறிப்பாக இப்படத்தில் தன்னுடைய வழக்கமான காமெடி ஹீரோ என்ற இமேஜை தாண்டி தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
அமேசான் காட்டுப்பகுதில் இருந்து வாழிடம் பறிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு துரத்தப்பட்ட ஒரு இனத்தை சேர்ந்த கூகுள் என்ற பாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார் சந்தானம். தன்னைப்போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக செல்லும் இடங்களில் எப்படி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் அதிலிருந்து, எப்படி மீண்டு வருகிறார், தன்னை நம்பியவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே குலு குலு படத்தின் கதை.
நகைச்சுவை பாத்திரம், இரண்டாவது நாயகன், முழுநீள நாயகன் பாத்திரம் என பல்வேறு பாத்திரங்களை நடித்திருந்தாலும், சந்தானத்த்ன் சினிமா கெரியரில் இது ஒரு புதிய பாத்திரம், முக்கியமான பாத்திரம். இதுவரை பார்க்காத சந்தானத்தை நீங்கள் பார்க்கலாம். நாயகன் கதாபாத்திரப் படைபுக்காக, இயக்குனருக்கு ஒரு சிறப்பு பாராட்டு.
முதலும் நீ முடிவும் நீ படத்தில் சைனிஸ் பாத்திரத்தில் நடித்த ஹரீஸ், நக்கலைட்ஸ் கவி, மெளரீஷ், யுவராஜ் மற்றும் வில்லன் பிரதீம் ராவத் என அனைவரும் மிகச்சிறப்பாக நடித்திருப்பது படத்துக்கு பலம் சேர்க்கிறது
உலக அரசியலை மிக எளிய நகைச்சுவை வசங்கள் மூலம் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். மிகச்சிறந்த ப்ளாக் ஹூமர் படங்களின் ஒன்றாக இப்படமும் சொல்லப்படும். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு ஒரு சிறந்த பயணத்துக்கான அனுபத்தை கொடுத்திருக்கிறது.
குடும்பத்துடன் சென்று கொண்டாடும் படமாக இருக்கிறது குலு குலு
குலு குலு குதூகலம்