கொடூர கொலைகள், கடத்தல் சம்பவங்கள் என பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், அவற்றையெல்லாம் விட புதிய கோணத்தில் இருக்கிறது ஜோதி திரைப்படம். எட்டுத் தோட்டாங்கள், ஜீவி என வித்தியாசமான கதைகளை தேந்தெடுத்து நடித்து வரும் வெற்றியின் வித்தியாச வரிசையில் ஜோதி படமும் ஒரு மைல்கல்.
நிறைமாத கர்பிணியாக இருக்கும் ஷீலா ராஜ்குமாரின் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திச்செல்கிறது ஒரு கும்பல். அந்த கும்பலை பிடிக்க களமிறங்குகிறார் காவல்துறை அதிகாரியான வெற்றி. கும்பலின் நோக்கம் என்ன, எப்படி அந்த கும்பலை வெற்றி ட்ரேஸ் செய்கிறார் என்பதே ஜோதி படத்தின் கதை.
நாம் முன்பே சொன்னது போல் வித்தியாசமன கதைகளை தேர்வு செய்பவர் வெற்றி, அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை போல் இருக்கிறது இப்படம். எட்டு தோட்டாக்கள் படத்துக்குப்பிறகு மீண்டும் போலீஸ் பாத்திரம் ஏற்றிருக்கிறார் வெற்றி. ஆயினும் அப்படத்தில் வந்த பாத்திரத்துக்கும் இப்பாத்திரத்துக்கும் மிகப்பெரிய மாடுலேசன் வேரியேசனை காட்டி இருக்கிறார். டூலெட், மண்டேலா என தன் பங்கிற்கு ஷீலா ராஜ்குமாரும் வித்தியாசமான படங்களில் நடித்து வருபவர், அவருக்கும் இப்படம் மிகச்சிறந்த இடத்தை கொடுத்திருக்கிறது.
தேடத்தேட கிடைக்கும் புதிய தகவல்கள் போல ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பது, தமிழ் திரைக்கதை உலகுக்கு புதிது. அந்த புதுமையை சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். அதே போல் ப்ளாஸ் பேக் காட்சிகள் நம்மை கட்டிப்போடும் அளவுக்கு சிறப்பாக ஸ்டேஜிங் செய்யப்பட்டுள்ளது. பல கிளைக்கதைகள், பல ப்ளாஸ் பேக்குகள் பல்வேறு தளங்களில் பயணிக்கும் படத்தை, தன்னுடைய எடிட்டிங் மூலம் மிகச்சிறப்பான படமாக கொடுத்திருக்கிறார் சத்யமூர்த்தி, செசிஜயாவின் கேமிரா படத்டின் தன்மைக்கேற்ப இருப்பது படத்துக்கு பலம்.
வித்தியாசமான கதை, வித்தியாசமான ட்ரீட்மெண்ட் என தமிழ் சினிமா ரசிகர்களை புதிய தளத்துக்கு கொண்டு சென்றுள்ளது ஜோதி திரைப்படம்
ஜோதி பிரகாஷிக்கிறது