01.08.2022:

லீ மேஜிக் லேண்டர்ன்
நுங்கம்பாக்கம்.

இன்று மாலை 6 மணி அளவில் ,
மாண்புமிகு தமிழக முதல்வர்

திரு. மு. க ஸ்டாலின் அவர்கள், இயக்குனர் _ நடிகர் திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார். திரைப்படத்தைப் பார்த்ததும் ,
முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள்
பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி,
“இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில்
அற்புதம் !” என்று பாராட்டி , பார்த்திபனையும்
படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார்.
முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் ‘நேற்றைய அரசியல் வரலாறு – 2092 “
எனும் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து முதல்வரிடம்
வழங்க, அதை ரசித்து பெற்றுக் கொண்டார்.

இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4 வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை இரவின் நிழல் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் தமிழகம் முழுவதிலுமுள்ள
திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன்…
இப்படிப்பட்ட அசாத்தியமான உழைப்பிற்கு ரசிகர்கள் இப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன்
இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முதல்வரின் பாராட்டு , தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார்!

https://we.tl/t-ihJn2ffRj5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here