விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படத்தையும் தற்போது இவர் தயாரித்து வருகிறார். மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், தமிழ்ப்பட உள்ளடக்கம் மற்றும் இந்திய வணிகப் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினராக தற்போது இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்
இச் செய்தியை மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்ட இயக்குநர் ஆறுமுக குமார், “மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் Tamil Film Content & India Market by National Film Development Corporation Malaysia (FINAS) எனக்கு அளித்த இந்த கெளரவம் நான் சற்றும் எதிர்பாராதது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஓர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்ப்பட உலகம் எனக்கு பயனுள்ள பல அரிதான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. தமிழ்த் திரைப்பட உள்ளடக்கம் மற்றும் வணிகப் பிரிவின் Tamil Film Content & India Market by National Film Development Corporation Malaysia (FINAS) நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதை எனக்குக் கிடைத்த பெரிய வரமாகவே கருதுகிறேன். இந்த வாய்ப்பின் மூலம் நமது வணிக எல்லைகளை மேலும் உயர்த்தவும், இந்திய மலேஷிய பொழுது போக்கு வணிக மதிப்புகளை உயர்த்தவும் பாலமாக இருப்பேன்” என்றார் ஆறுமுக குமார்.
Press Release of Director Arumugakumar
Filmmaker Arumugakumar, who shot to fame for his directorial debut ‘Oru Nalla Naal Paathu Solren’ (Vijay Sethupathi-Gautham Karthik starrer) and producer of Vijay Sethupathi-SP Jhananathan’s Laabam is appointed as a committee member of Tamil Film Content & India Market by National Film Development Corporation Malaysia (FINAS).
Sharing the news with high-spiritedness, director Arumugakumar says, “Such a surprise is something that was uncalled-for and I’m extremely happy about the stature that National Film Development Corporation Malaysia (FINAS) has offered me. As a filmmaker and producer, the Tamil film industry has gifted me with more valuable experience. And now, to find this honour of being a committee member of Tamil film Content & India Market is a big boon to me. I would like to make use of this opportunity and contribute to the fullest in escalating the values of our region and build a substantial bridge between India and Malaysia in the panorama of entertainment.”