காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 500 ஏழை மாணவ மாணவிகளுக்கு அரிசி தென்னங்கன்றுகள்
கலப்பை மக்கள் இயக்கம் PT செல்வகுமார் உதவி !
காமராஜர் பிறந்த தின விழாவை கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் குமரி மாவட்டம் பகுதிகளிலும் பொட்டல்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஏழை மாணவ மாணவிகள் 500 பேருக்கு அரிசி மூட்டைகள் தென்னங்கன்றுகள் மற்றும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது ..சிறந்த ஆசிரியர்கள் 51 பேருக்கு கலப்பை சான்றிதழ்களும் நல்லாசிரியர் விருதும் அளித்து கவுரவிக்கபட்டது..
பின்னர் மாணவர்கள் முன்னிலையில் PT செல்வகுமார் பேசியதாவது ;
ஒரு மாணவனை சிறந்த முறையில் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு போற்றக்கூடியது .தன்னிடம் படித்த மாணவனின் வளர்ச்சியை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்வது இந்த ஆசிரியப்பெருமக்கள் தான் .. சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாளில் நல்லாசிரியர் விருதுகளும் ,சான்றிதழ்களும் கலப்பை மக்கள் சார்பில் வழங்கினோம் .. ஓகி புயல் குமரியை அசுரத்தனமாக பேரழிவை ஏற்படுத்திய போது கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 50000 தென்னங்கன்றுகளை குமரியில் வைத்து வழங்கினோம் ..இன்று ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் 500 தென்னங்கன்றுகளை வழங்கியது கூட குமரியை பசுமையான மாவட்டமாக மாற்றுவது தான் கலப்பை மக்கள் இயக்கத்தின் முதல் நோக்கம் ..இன்று அமெரிக்காவில் சிறந்த நேர்மையான ஆட்சி செய்த முதலமைச்சர்களில் முதல் இடத்தை நம்முடைய ஏழைப்பங்காளன் காமராஜர் அவர்களுக்கே வழங்கியது .மறைந்தும் அவருடைய புகழை உலக நாடுகள் கொண்டாடி வருகிறது . காமராஜரின் சிந்தனையும் அறிவையும் மாணவர்கள் முன்னுதாரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று பேசினார் …
குமரி மாவட்ட அரசு ஆசிரியர் நல்வாழ்வு செயலாளர் பெருமாள் பேசியதாவது : கலப்பை மக்கள் இயக்கம் என்பது ஒரு பெரிய அரசியல் இயக்கமோ, படைபலம் கொண்ட கட்சியோ இல்லை! ஒரு சாமானியனாக கிட்டத்தட்ட 75நாட்கள் தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார். ஓகி புயல் வந்தபோது 50 ஆயிரம் மரங்களை நட்டார். அவர் மூலமாக மக்கள் இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கில் அவர் நட்டு குமரியை பசுமை பூங்காவாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளார். கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளில் 51 ஆசிரியர்களை கௌரவப்படுத்தி மாணவர்களுக்கு தென்னங்கன்றுகளை அரிசிகள் வழங்கியது சாதாரண விஷயமல்ல.. உண்மையிலேயே PT செல்வகுமார் போன்றவர்கள் பணி விரிவடைய நாம் தோள் கொடுத்து அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்..
.பின்னர் மாணவ மாணவிகள் அனைவருக்கும் சமூக விலகலை கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர் …ஏழை மாணவிகளுக்கு அரிசி வழங்க அழகை நவமணி நினைவாக அருள் உதவினார்.தென்னங்கன்றுகள் வழங்க அழகை துரைராஜ் உதவி புரிந்தார்..இந்நிகழ்வின் ஏற்பாடுகளை பொட்டல்குளம் அரசு நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் R .லிங்கேசன் செய்தார் ..ஆசிரியர் குமார் ,மைக்கேல் ராஜன் ,வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ,காணிமடம் தனசேகர் , சங்கர் ,அனீஷ் ,கார்த்திக்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்
காமராஜர் பிறந்த நாளில் வித்தியாசமாக செய்து பரபரப்பை ஏற்படுத்திய கலப்பை மக்கள் இயக்கம்