The pandemic crisis has eventually turned out to be a major barricade for every industry, especially showbiz. With the Government placing some relaxations over the restrictions, it has eased up the situations for few films that had to complete the post-production work. One among them is director Ranjit Jeyakodi’s “Yaarukkum Anjael” starring Bindu Madhavi and Darshana Banik in lead roles. While the team had completed shooting before the COVID 19 issues had popped up, the postproduction work was put on hold eventually due to the ongoing problems. However, the team is happy that the works have resumed with Bindu Madhavi dubbing her portions today. This will be followed by others in the star-cast and the team is keen on completing the postproduction full swing by ensuring that the social distancing and safety precautions as insisted by Government are followed.

Bankrolled by Devarajalu Markandeyan for Third Eye Entertainment, the film revolves around siblings (played by Bindu Madhavi and Darshana Banik), who face some life-threatening encounters on reaching Ooty from abroad to sell their ancestral property and how they combat the hazardous situation. The entire shooting of this film was completed in a span of 30 days in Ooty amidst challenging climatic conditions.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’!

பெருந்தொற்று நோயின் சர்வதேச பரவல் அனைத்து தொழில் துறையையும் வெகுவாக முடக்கியிருக்கிறதென்றாலும், திரைப்படத் தொழில் வெகுவாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது, பிரச்சனைகளை சற்றே இலகுவாக்கி பல படங்களின் பின் தயாரிப்புப்பணிகளை துவக்கச் செய்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பாணிக் பிரதான பாத்திரங்களில் நடித்த, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘யாருக்கும் அஞ்சேல்’. கோவிட் 19 பிரச்னைக்கு முன்பே, படக்குழு முழு படப்பிடிப்பையும் பூர்த்தி செய்துவிட்டது என்றாலும், பிரச்னை தீவிரமானதால்,தொடர்ந்து பின் தயாரிப்புப் பணிகளைத் தொடர முடியவில்லை. தற்போது படக்குழு டப்பிங் பணிகளைத் தொடங்க, பிந்து மாதவியின் குரல் பதிவு பணிகள் இன்று நடைபெற்றன. சமூக இடைவெளி மற்றும் அரசு அறிவித்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியான முறையில் பின்பற்றி தொடர்ந்து மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

ஊட்டியில் உள்ள தங்கள் பாரம்பரிய சொத்தை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் சகோதரிகள் இருவருக்கும் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான பிரச்னைகளையும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார்கள் என்பதையும் விறுவிறுப்பாக விவரிக்கும் படம் ‘யாருக்கும் அஞ்சேல்’. தர்ட் ஐ என்ட்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜூலு மார்கண்டேயன் தயாரிக்கும் இப்படத்தில் பிந்து மாதவியும் தர்ஷனா பாணிக்கும் துணிச்சல் மிக்க சகோதரிகளாக நடித்திருக்கின்றனர். சவால் மிகுந்த ஊட்டியின் தட்பவெட்ப சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தொடர்ந்து முப்பது நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here