சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஐசரி கணேசன்  தயாரிப்பில், வெளியாகி இருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நாவலை மையமாக வைத்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 
திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் தன் தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வரும் சிம்பு, ஒரு தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். ஒருநாள் அத்தோட்டம் தீப்பிடித்து எரிகிறது.  அந்தத் தீயில்  மாட்டிக்கொள்கிறார் சிம்பு. ஒருவழியாக தீயில் இருந்து உயிர் பிழைத்து வரும் சிம்புவுக்கு வேறு ஒரு பிரச்சனை காத்திருக்கிறது. அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க மும்பையில் சமையல் வேலைக்குச் செல்லும் சிம்பு, அங்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பல கொலைகளை செய்ய வேண்டி வருகிறது. தமிழ்நாட்டின் ஒரு கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்த ஒரு அப்பாவி இளைஞனான சிம்பு, மும்பையில் என்ன ஆகிறார் என்பதே வெந்து தணிந்தது காடு படத்தின் கதை.
சிம்புவின் முகத்துக்கு நேரே விரலை நீட்டி குறை சொன்ன அனைவரும் சிம்புவை கொண்டாடியே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது இப்படம். சிம்புவின் திரைப்பயணம் மற்றும் நடிப்பில்  இப்படம் மிகமுக்கிய மைல்கல் என்று சொல்லலாம்.  சிம்புவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதிகா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி சித்தி இத்தானிக்கு மிகச்சிறந்த கதாபாத்திரம், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு இது முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாவலைப் படமாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன, அதிலும் குறிப்பாக பிரபல எழுத்தாளர்களின் நாவல் என்றால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் அந்த வகையில் ஜெயமோகன் எழுதிய நாவலை குறையே சொல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறந்த படமாக கொடுத்திருக்கிறார் கௌதம் மேனன். கௌதம் மேனன் ட்ரெண்ட் செட்டர் என்பது அனைவருக்கும் தெரியும், இந்த வகையில் இந்த படத்தையும் தமிழ் திரையுலகில் ஒரு மிகச்சிறந்த ட்ரெண்ட் செட்டர் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன்.
சித்தார்த்தாவின்  ஒளிப்பதிவு உலகத்தரத்தில் உள்ளது. எடிட்டர் ஆண்டனியின் படத்தொகுப்பு பிரமாதப்படுத்தி இருக்கிறது . ஏ ஆர் ரகுமானின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
வெந்து தணிந்தது காடு படக்குழுவுக்கு வணக்கத்தை போடு 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here