மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் 2. புகழ் பெற்ற எழுத்தாளர் கல்கியின் பெருமை மிகு படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், அதே நேரம், நாவலை படித்தவர்கள் மத்தியில், நாவலைப்போலவே சிறப்பாக வருமா இல்லையா என்ற அச்சமும் இருந்த்து. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி பொன்னியின் செல்வன் முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்று இதுவரை வெளியான அனைத்து தமிழ் படங்களில் வசூல் சாத்னையை முறியடித்தது. அதே போல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் சிறப்பாக்க வெளியாகியுள்ளது

முதல் பாகத்தின் முடிவில் கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மனை ஊமை ராணி காப்பாற்றுவதில் தொடங்கும் படம் விறுவிறுபாக செல்கிறது. அனைவரும் எதிர்பார்த்த கடம்பூர் மாளிகை சம்வமும் அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகளுமாக படம் நிறைவடைகிறது. நாவலைபோல் இருக்குமா என்று சந்தேகப்பட்டவர்களுக்கு முதல் பாகத்திலேயே, இயக்குனர் மணிரத்னம் பதிலளித்துவிட்டார் என்றாலும் இரண்டாவது பாகத்தில் கடம்பூர் மாளிகை காட்சிகள், காபாலிகர்களிடம் வந்தியத்தேவன் மாட்டிக்கொள்ளும் காட்சிகள் என அடுத்தடுத்து கண்முன்னே விரிகிறது ஆச்சர்யங்கள். தமிழ் நாட்டின் முக முக்கிய வரலாற்று நிகழ்வை, தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய நாவலை திரையில் சிறப்பாக வழங்கியதற்காக இயக்குனருக்கும், பொன்னியின் செல்வன் குழுவுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

இனி வரும் காலங்களில் ராஜராஜனின் இளம் வயது உருவம் என்றால் நம் கண்முன்னே நிற்கப்போவது ஜெயம் ரவியின் முகம்தான். அந்த அளவுக்கு சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார். ஏறக்குறைய ஐந்து தலைமுறை தமிழ் நாவல் ரசிகர்களின் மனதை கவர்ந்த கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக உயிர் கொடுத்திருக்கிறார் கார்த்தி. திரையில் த்ரிஷா தோன்றும் காட்சிகளில், த்ரிஷாவை தவிர வேறு எதையும் கவனிக்க முடியாத அளவுக்கு நம்மை காந்தம் போல் கவர்ந்திழுக்கிறார் த்ரிஷா, உலக அழகி ஐஸ்வர்யா, கண்களில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு நந்தினி கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். ஆதித்த கரிகாலன் இழப்பு நாவலை விட திரையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் காரணம் விக்ரமின் நடிப்பு. பிரபு, சரத்குமார், பார்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரின் பாத்திரங்களும் நம் மனதில் பதியக்காராணம் எழுத்தாளர் கல்கி மட்டுமல்ல இவர்களின் நடிப்பும்தான்.

தமிழ் திரையிலகின் முக முக்கிய ஆவணமாக மாறப்போகும் படம் என்பதை உணர்ந்து, காட்சிகளை பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். ரஹ்மானின் இசையும், பாடல்களும் நம்மை இன்னும் சில வருடங்களுக்கு முனு முனுக்கை வைக்கப்போகின்றன. இப்படத்தின் முதுகெலும்பு என்று சொல்வதென்றால் கலை இயக்கதையும், எழுத்தையும் சொல்ல வேண்டும் அந்த வகையில் கலை இயக்குனர் சாபு சிரில் மற்றும் குமரவேல், ஜெயமோகன் ஆகியோர் தங்கள் பங்களிப்பில் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் மிக அருமை. இப்படியாக படத்தின் அனைத்து துறையும் தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி இக்காவியத்தை உருவாக்கியுள்ளனர்.

இயகுனர் மணிரத்னமும் எழுத்தாளர் கல்கியும் இணைந்து உருவாக்கிய காவியப்படைப்பு பொன்னியின் செல்வன்

பொன்னியில் செல்வன் 2 : வரலாற்று வெற்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here