Chennai, July 6, 2024: Kauvery Hospital, Radial Road, launched its state-of-the-art Department of ENT equipped with advanced facilities for comprehensive diagnosis and treatments at par with international standards. The Department was officially inaugurated by Padma Shri Prof Mohan Kameswaran, Managing Director, Madras ENT Research Foundation (P) Ltd (MERF).
The Department of ENT, in addition to routine ENT work, has expertise in sleep apnea (snoring) treatments and cochlear implants. The department has dedicated endoscopy rooms, an audiology lab, vertigo lab and operation theatres with cutting-edge technology for performing micro ear surgeries, sinus surgeries and head & neck surgeries.
Prof Mohan Kameswaran visited the department of ENT at Kauvery Hospital, Radial Road, and lauded the efforts and infrastructure the hospital had provided for treating ENT patients. He remarked that Kauvery Hospital stood apart from other healthcare providers by virtue of skilled and high-quality medical professionals. He also prophesized that Kauvery Hospital would scale new heights with partnerships between clinicians and a world-class infrastructure at hand.
Dr S Chandrakumar, Founder & Executive Chairman, Kauvery Group of Hospitals, said, “We are happy to announce the launch of our Department of ENT led by Dr Anand Raju, one of the finest experts in the field. The department is equipped with the latest medical technologies to provide high-quality ENT treatment. With the amalgamation of skilled experts and advanced infrastructure we will focus on cochlear implants to restore hearing, sleep apnea treatment, surgery for airway obstruction, micro ear surgeries and several other ENT treatment procedures too.”
Dr Aravindan Selvaraj, Co-founder & Executive Director, Kauvery Group of Hospitals, reiterated Kauvery Hospital’s commitment of providing holistic care and that the launch of the ENT Department has significantly contributed towards the goal.
Dr Anand Raju, Head of Department, ENT, at Kauvery Hospital, Radial Road, said, “The launch of our ENT Department will provide comprehensive care for all adults and children with conditions in the ear, nose and throat, and enable them to get timely intervention through expert care. The advanced facilities available here will ensure that people get accurate diagnosis and the right treatment to address their existing condition. Our state-of-the-art vertigo lab will provide expert care to patients with complaints of dizziness and intractable vertigo. We have several combined years of experience in cochlear implants, surgeries for sleep apnea such as volumetric tissue reduction, palatopharyngeoplasty, maxillomandibular advancement, etc., sinus surgeries, micro ear surgeries and several other ENT treatment procedures.”
With the newly launched Department of ENT, Kauvery Hospital, Radial Road, continues its mission to provide exceptional medical care. It is a leading healthcare institution offering advanced treatments and surgical interventions in neurology, cardiology, gastroenterology, women and child wellness, orthopaedics, joint reconstruction, urology, nephrology, fertility and other specialities. With a dedicated team of experts and state-of-the-art medical facilities including 50+ critical care beds, 20+ NICU beds, 7+ operation theatres, an advanced Cath lab, cutting-edge neuro diagnostic equipment like 3T MRI and 4K + 3D neuro microscope, transplant facilities and 24/7 dialysis unit, we provide world-class medical care to patients from around the globe.
காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது!
சென்னை, ஜூலை 6, 2024: காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
தூங்கும் பொழுது ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது கேளாமை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பது இந்த ENT பிரிவின் சிறப்பு அம்சமாகும். நுண் காது அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைச் செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தனிப்பட்ட உள்நோக்குமானி அறைகள், ஆடியோலஜி ஆய்வகம், தலைச்சுற்றல் ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
முனைவர் மோகன் காமேஸ்வரன் காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் காது மூக்கு தொண்டை பிரிவுக்கு வருகை தந்துருந்தப்பொழுது, ENT நோயாளிகளுக்கு மருத்துவமனை வழங்கிய மருத்துவ சேவை முனைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பை உயர்வாக பாராட்டி பேசினார். திறமையான மற்றும் உயர்தர மருத்துவ வல்லுநர்களை வைத்திருப்பதன் மூலம், காவேரி மருத்துவமனை மற்ற மருத்துவமனைகளை விட தனித்துவம் பெற்றுள்ளது, என்று குறிப்பிட்டார். மேலும், மருத்துவர்கள் மற்றும் கைவச உலகத்தர உள்கட்டமைப்பின் கூட்டுறவால் காவேரி மருத்துவமனை புது உயரங்களை அடையும் என்று தீர்க்கமாகத் தெரிவித்தார்.
“ENT பிரிவின் சிறந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ஆனந்த் ராஜூ தலைமையில் எங்கள் ENT பிரிவு தொடங்கப்பட்டதை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்”, என்று காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். “மேலும் இந்த பிரிவு, சமீபத்திய மருத்துவ தொழில் நுட்பங்களை கொண்டு உயர்தர ENT சிகிச்சையை வழங்கும் என்றும் திறமையான மருத்துவ நிபுணர்கள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், செவிப்புலன் மீட்புக்கான கோக்லியர் உள்வைப்புகள், தூக்கத்தில் மூச்சு திணறலுக்கான சிகிச்சை, மூச்சுக்குழாய் அடைப்புக்கு அறுவை சிகிச்சை, நுண் காது அறுவை சிகிச்சைகள் மற்றும் பல ENT சிகிச்சை வகைகள் மீது கவனம் செலுத்தும்”, என்று அறிவித்தார்.
டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் அவர்கள் காவேரி மருத்துவமனையின் முழுமையான சிகிச்சை அளிக்கும் முறையில் ENT பிரிவின் தொடக்கம் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தினார்.
டாக்டர் ஆனந்த் ராஜு, காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, ENT பிரிவின் தலைவர்: “எங்கள் ENT துறையின் தொடக்கம், அனைத்து வயதினருக்கும் ஏற்படும் காது, மூக்கு மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு விரிவான மருத்துவ சேவைகளை அளிப்பதன் மூலம் சரியான நேரத்தில் சிகிச்சை பெற அவர்களுக்கு உதவும். இங்கு வழங்கப்படும் மேம்பட்ட வசதிகள், துல்லியமான நோயறிதலும், ஒவ்வொருவரின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு சரியான சிகிச்சையை வழங்குவதையும் உறுதி செய்யும். எங்களின் அதிநவீன வெர்டிகோ ஆய்வகம் தலைச்சுற்றல் மற்றும் தீராத தலை சுற்றல் போன்ற நாள்பட்ட நிலமைகள் கொண்ட நோயாளிகளுக்கு நிபுணத்துவ சிகிச்சை அளிக்கும். கோக்லியர் உள்வைப்புகள், வால்யூமெட்ரிக் திசு குறைப்பு, பலாடோபரிங்ஜியோபிளாஸ்டி, மாக்ஸில்லோமாண்டிபுலர் முன்னேற்றம் போன்ற தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கான அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள், நுண் காது அறுவை சிகிச்சைகள் மற்றும் பல ENT சிகிச்சை செயல்முறைகளில் எங்களுக்கு பல வருட ஒருங்கிணைந்த அனுபவம் உள்ளது.”
புதிதாக தொடங்கப்பட்ட ENT பிரிவுடன், காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, சிறந்த மருத்துவ சேவையை தொடர்ந்து வழங்குவதில் கடமைப்பட்டுள்ளது.
சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி மருத்துவமனையாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகவியல் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், மேம்பட்ட கேத் லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல்
நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகள் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.