இயக்குநர் ஷங்கர் தனது 30 ஆண்டுகால திரை வாழ்க்கையில் தெலுங்கு ரசிகர்கள் அளித்து வரும் அன்பிற்கு நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “எனது பாணியில் தனித்துவமான கதையுடன் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். அதன் விளைவுதான் கேம் சேஞ்சர். கடந்த மூன்று தசாப்தங்களாக நான் தெலுங்கு படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு பார்வையாளர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர். நான் முன்பு மற்ற ஹீரோக்களுடன் பணிபுரியலாம் என்று நினைத்தேன். ராம் சரணுடன் தெலுங்கில் அறிமுகமாகியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். அப்பண்ணாவாக அவர் நடித்திருப்பது படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.”

ஷங்கர் மற்றும் ராம் சரண் ஆகியோருடன் பணிபுரியும் பாக்கியத்தைப் பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் தமன் கூறுகையில்..,
“சில திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தினாலும் பயமுறுத்தவும் செய்யும். அப்படித்தான் கேம் சேஞ்சரைப் பற்றி நான் உணர்ந்தேன். ராம் சரண் சாரும் ஷங்கர் சாரும் இணையும் இந்த அற்புதமான படத்தில் பணிபுரிவேன் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கேம் சேஞ்சர், பாலய்யா பாபுவின் டாக்கு மகராஜ் மற்றும் ராஜு சாரின் சங்கராந்திகி வஸ்துன்னம். மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராஜேஷ் கல்லேபள்ளி கூறுகையில், “இன்னும் பல இந்நிகழ்ச்சிக்காக வெளியில் காத்திருக்கின்றனர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவில் முதல்முறையாக இவ்வளவு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்துகிறோம். தில் ராஜு சார் ஆதரவால்தான் இது சாத்தியமானது. எங்களுக்காக ஷங்கர் சார், ராம் சரண் மற்றும் அனைத்து முன்னணி நடிகர்களும் வந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி.

சிறுவயதிலிருந்தே ஷங்கரின் படங்கள் பார்த்து வளர்ந்தவன் என்று இயக்குநர் புச்சி பாபு சனா தெரிவித்தார். “பிதாபுரம் பூர்ணா தியேட்டரில் பாரதியுடு படத்தைப் பார்த்தேன். ஷங்கர் சார் கமர்ஷியல் கோணத்தில் படம் எடுப்பதில் ஜாம்பவான். அவருக்கு நிகராக யாராலும் படம் எடுக்க முடியாது. கேம் சேஞ்சரில் நான்கு காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். அவை பிரமாதமாக இருந்தன. ராம் சரண் சார் என்னைப் புரிந்து கொண்டார். என் குருவை இயக்குநராக்கிய தில் ராஜு அவர்களின் கேம் சேஞ்சர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

பிரபல தயாரிப்பாளர் அனில் சுங்கரா கூறுகையில், டல்லாஸில் தெலுங்கு திரைப்பட விழா நடைபெறுவது இதுவே முதல் முறை. “டல்லாஸுக்கு வருகை தந்த ராம் சரண் இங்குள்ள ரசிகர்கள் மீதான அன்பையும் பாசத்தையும் காட்டுகிறார். இனிமேல், டல்லாஸில் பல திரைப்பட நிகழ்வுகளைப் பார்ப்போம். இந்த நிகழ்வு இந்த டிரெண்டைத் தொடங்கும். சுகுமார் சார் புஷ்பா 2 மூலம் நம்மைப் பெருமைப்படுத்தினார். நாம் அனைவரும் ஷங்கர் சாரின் ரசிகர்கள் என்பதை இப்பட வெற்றி மூலம் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்துவோம்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பன்முக நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், “பவன் கல்யாண் அவர்களுக்குக் கதை சொல்ல முதல்முறையாக ஹைதராபாத் வந்தேன். ராம் சரண் மிகவும் உண்மையான ஆத்மா. அவருடைய தொலைபேசி எண்ணை ‘ஆர்.சி-யாக சேமித்து வைத்துள்ளேன். அவர் தான் உண்மையான ராஜா. நடத்தை, நடனம், நடை, நடிப்பு என அனைத்திலும் மன்னன். கேம் சேஞ்சர் நிச்சயமாக அனைவரையும் மகிழ்விக்கும்.”

படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சலி, அமெரிக்காவில் ஒரு தெலுங்கு படத்தின் முதல் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வை நடத்த டல்லாஸ் தான் சரியான தேர்வு என்று கூறி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். “கேம் சேஞ்சரில் நான் நடித்த கதாபாத்திரம் எனது கேரியரில் சிறந்ததாக இருக்கும். அது எனக்கு ‘கேம் சேஞ்சருக்கு முன்பும் கேம் சேஞ்சருக்குப் பிறகும்’ என்ற படமாக இருக்கும். படத்தில் ராம் சரணின் புதிய பரிமாணத்தை நீங்கள் காண்பீர்கள். அவருடைய அப்பண்ணா கேரக்டரை முழுவதுமாக ரசித்தேன் என்றார்.”

கேம் சேஞ்சர் திரைப்படத்தை, தமிழில் எஸ்விசி மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் தயாரித்துள்ளது. இந்தியில் ஏஏ பிலிம்ஸ் அனில் ததானி வெளியிடுகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அரசியல் அதிரடி திரைப்படத்தின் இசையை சரிகமா வழங்குகிறது.

கேம் சேஞ்சரில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். சு.வெங்கடேசன், விவேக் ஆகியோர் எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். படத்தின் இணை தயாரிப்பாளராக ஹர்ஷித் பணியாற்றியுள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ளார், எஸ் தமன் இசையமைத்துள்ளார், எஸ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.நரசிம்மராவ் மற்றும் எஸ்.கே.ஜபீர் ஆகியோர் லைன் புரொடியூசர்களாக பணியாற்றியுள்ளனர். அவினாஷ் கொல்லா மற்றும் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்ட்டின், ஜானி மற்றும் சாண்டி ஆகியோர் நடன அமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தில் ராஜு புரொடக்‌ஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here