
2025 இல், முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு எங்களது கற்பனை எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி உலகத் தரத்திற்கு இணையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட புதுவிதமான கதைகளை வழங்க இருக்கிறோம். கற்பனையான காதல்-காமெடி கதைகள் மற்றும் பெருமதிப்புமிக்க குடும்பக் கதைகள் முதல் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் காமெடி படங்கள், அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்சன் படங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்தமான பிரபலங்களின் படங்கள் என அனைவருக்குமான படைப்பாக வழங்க இருக்கிறோம். இந்தியாவில் மிகவும் பிரபலமான கதை சொல்லிகள் மற்றும் நல்ல குரல் வளம் உள்ளவர்களோடு கைகோர்த்து அவர்களது வாழ்க்கைக்கு புத்துயிர்ப்பு கொடுக்க உள்ளோம். 700 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் உள்ள இந்த தளத்தில், ஒரே ஒரு படைப்பைப் பற்றி மட்டும் பேசுவது முறையாக இருக்காது என்ற காரணத்தினால், எங்களால் எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ..? அவ்வளவுக்கு அவ்வளவு சிறப்பாகவும் தரமாகவும் அனைத்து படைப்புகளையும் கொடுக்க முயற்சித்துள்ளோம். பார்வையாளராக உங்களுடைய எதிர்பார்ப்பு எதுவாக இருந்தாலும் சரி, ஆனால் Netflix Ott யில் அடுத்தடுத்து வெளியாகப் போகும் படைப்புகள் என்னென்னவென்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாததாக இருக்கும்.
மோனிகா ஷெர்கில்
Vice President – Content, Netflix India

TEST
Netflix /2025
உலகின் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட மூன்று மனிதர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட்டில் ஒன்றிணையும் போது, அது அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய முடிவுகளை எடுக்கக்கூடிய கட்டாயத்தைத் தூண்டுகிறது.

Test படத்தைப் பற்றி படக்குழு: “வாழ்க்கை ஒரு விளையாட்டு! வாழ்க்கைப் பயணம் என்றால் என்ன ..? வழியில் அவை சந்திக்கும் சவால்கள் என்னென்னவென்பதை, ஒரு விளையாட்டின் மூலமாக கண்ணாடி போல் பிரதிபலிப்பதே Test படத்தின் கதை. திரைத்துறையில் பெரு மதிப்புடன் போற்றப்படும் நடிகர்களான ஆர். மாதவன், நயன் தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் தங்களது நடிப்பை மிகவும் ஆழமாகவும் உணர்ச்சியோடும் வெளிப்படுத்தி இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இது மாதிரி ஒரு நடிப்பு கூட்டணி வேறு எந்த படத்திலும் அமையவில்லை. Test படத்தில் காதல், கனவு, இலட்சியம்,விருப்பம் மற்றும் கிரிக்கெட் என அனைத்தும் கலந்த கதையாக வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் மனதையும் தாக்கும். மிகவும் பவர்ஃபுல் தீம் கொண்ட Test படத்தினை உலகில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும், Netflix உடன் இணைந்து வழங்குவதில் பெருமை அடைகிறோம்.
இயக்கம்: S.சசிகாந்த்
கதை: S. சசிகாந்த்
தயாரிப்பு: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & S. சசிகாந்த் (A YNOT Studios Production)
நடிகர்கள்: R.மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின்
ராணா நாயுடு: சீசன் 2
Netflix/2025
ராணா நாயுடு தனது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக கடைசியாக ஒரு வேலையைத் தொடங்குகிறார். ஆனால் விரைவிலேயே தனக்குப் பிடித்தமானவர்களால் வேற ஒரு பிரச்சினையில் சிக்குகிறார் அதுமட்டுமில்லாமல் கடந்த காலத்தில் இவர் செய்த செயலால் நிழல் உலக தாதாக்களாலும் பிரச்சனைகளுக்குள்ளாகிறார்.
லோகோ மோட்டிவ் க்ளோபல் மீடியா தயாரிப்பாளர் சுந்தர் ஆரோன் படத்தைப் பற்றி கூறியதாவது : ராணா நாயுடு சீசன் 2 வெளியீட்டுக்கு தயாராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக சீசன் 1 முடிந்த நாளிலிருந்து சீசன் 2 விற்கான வேலைகளை தொடங்கி விட்டோம். இந்த சீசனில் நடைபெறும் கதை, நோக்கம் மற்றும் பட்ஜெட் பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்தக் கதைக்கான நடிகர்கள் தேர்வு மற்றும் ஒருங்கிணைப்பு அனைத்தையும் லோகோ மோட்டிவ் க்ளோபல் மீடியாவுடன் இணைந்துNetflix குழு மிகவும் சுலபமாக்கியது.எதுவாக இருந்தாலும்! நெட்ஃபிக்ஸ் குழு எப்போதுமே சிறந்த கதையைச் சொல்வதில் மட்டுமே உறுதியாக உள்ளது. இந்த சீசன் வெளிவந்த பிறகு ரசிகர்கள் ஒவ்வொருவரும், இந்த மாதிரியான கதைக்காக நீண்ட காலக் காத்திருக்கலாம் என்று உறுதியாகக் கூறுவார்கள்.
கதை உருவாக்கம்: கரண் அன்ஷுமான்
இயக்கம்: கரண் அன்ஷுமான், சுபார்ன் வெர்மா, அபய் சோப்ரா
எழுத்து:கரண் அன்ஷுமான், ரியான் சோரஸ், கர்மன்யா அஹுஜா, அனன்யா மோடி, கரண் கவுர், வைபவ் விஷால்
தயாரிப்பு: சுந்தர் ஆரோன்
தயாரிப்பு நிறுவனம்: லோகோ மோட்டிவ் க்ளோபல் மீடியா
எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் : விஷால் பஜாஜ், நிஷாந்த் பாண்டே, ஆரிஃப் மிர்
நடிகர்கள்: ராணா டகுபதி, வெங்கடேஷ் டகுபதி, அர்ஜுன் ராம்பால், சுஷாந்த் சிங், அபிஷேக் பானர்ஜி, டினோ மோரியா.