
வில்லியம் பிரதர்ஸ் புரொடக்கஷன்ஸ் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி ‘ஆண்டவன்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இதில் கே.பாக்யராஜ் முதல்முறையாக கலெக்டராக நடிக்கிறார். டிஜிட்டல் விஷன் மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வைஷ்ணவி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஆதிரா, ஹலோ கந்தசாமி, டாக்டர் முத்துச்செவ்வம், வைஷ்ணவி, எம்.கே.ராதாகிருஷ்ணன், எஸ் டி முருகன், காக்கா முட்டை ஆயா, உடுமலை ரவி, மங்கிரவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

உலகில் நகரங்கள் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், கிராமங்கள் அழிந்து கொண்டிருக்கிறது. தயவுசெய்து ‘கிராமங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று உணர்ச்சிப் பூர்வமாகவும், எதார்த்தமாகவும் கதையைக் கையாண்டுள்ளார் இயக்குனர் வி. வில்லிதிருக்கண்ணன். ஒளிப்பதிவு மகிபாலன், இசை கபிலேஷ்வர், பின்னணி இசை சார்லஸ்தனா, எடிட்டிங் லட்சுமணன், நடனம் பவர் சிவா, சண்டை பயிற்சி சரவெடி சரவணன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு டாக்டர் முத்துச்செல்வம், சேலையூர் எஸ்.எஸ்.சுரேஷ். இந்த படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படக்குழுவினரை மனதாரப் பாராட்டி, யூ சான்றிதழ் வழங்கி உள்ளார்கள். விரைவில் திரையில் தோன்றுகிறார் ‘ஆண்டவன்’.