திரையுலக தொடக்க காலத்தில், M.K.தியாகராஜ பாகவதர்,P.U.சின்னப்பா போன்ற ஜாம்பவான்கள் தாங்களே பாடி, வசனம் பேசி வந்த நிலை மாறி, பாடகர்கள் பின்னணி கொடுக்க தொடங்கிய காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆர் அவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து “பாடகர்களின் பிதாமகன்” எனும் TM.சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரமான குரலால் திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அவர் பாடி மகிழ்வித்த பாடல்களின் எண்ணிக்கைகள் 5 ஆயிரத்தை தாண்டும்.
அந்த மாபெரும் கலைஞனின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நமது புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் மார்ச் 23 ஞாயிறு மற்றும் மார்ச் 24 திங்கள் இரவு 9 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக
திரு.சைதை துரைசாமி (முன்னாள் மேயர்)
திரு .துரை கருணா (மூத்த பத்திரிக்கையாளர்)
திரு .ரவி பிரகாஷ் (ஆனந்த விகடன் முன்னாள் பொறுப்பாசிரியர்)
திரு. பிரகாஷ் (MSV அவர்களின் புதல்வர்)
திரு. தேனப்பன் (தயாரிப்பாளர்)
திரு. விஜயராஜ் (TMS அவர்களின் உதவியாளர்)
திரு.முரளி ஸ்ரீனிவாஸ் (பொருளாளர் NTFA)
திரு. சிவாஜி ரவி (சமூக ஆர்வளர்)
திரு. வஜ்ரா ராம் (வஜ்ரா குரூப் ஆஃப் கம்பெனிஸ்)
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ராஜாவின் கானம் எனும் இசைக் குழுவினர் பாடி இசைத்து மகிழ்வித்தனர். இதன் கருத்தாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் ஆர்த்தி.