11:11 Productions associates with Lyca Productions for the release of
Yogi Babu Starrer “Panni Kutty” in Tamil Nadu, Karnataka & Kerala
It’s indeed a piece of great news for the entire Tamil film fraternity as the two most reputed production houses far-famed for their novel custom of churning out movies catering to the tastes of universal crowds are collaborating now. Yes, 11:11 Productions owned by Prabhu Thilaak collaborates with Mr. Subaskaran of Lyca Productions for releasing Yogi Babu’s out-and-out comedy caper titled ‘Panni Kutty’ in Tamil Nadu, Kerala, and Karnataka.
Sharing the good news, Mrs Shruthi Tilak, the co-producer and the director, 11:11 Productions says, “We, 11:11 Productions, are truly happy to be associated with Lyca production for the release of Panni Kutty in Tamil Nadu, Kerala, and Karnataka. As a company, our desire to deliver quality entertainment to film lovers will well be appreciated by bringing this ‘out-of-the-box comedy flick to the big screens. We are sure to make the theatres a laughing hub with this comedy family entertainer. 11:11 always considers it as a privilege and blessing to make the film lovers laugh their heart out and remember this flick for times to come …”
Pannikutty is directed by Anucharan and is produced by Lyca Productions, which is acquired by Dr. Prabhu Thilaak of 11:11 Productions. Apart from Yogi Babu, the film has an ensemble star cast comprising top league comedians like Karunakaran, Dindugal Leoni, Singam Puli, Vijay TV fame Ramar, Thanga Durai, and a few more familiar actors. The film has a musical score by K and cinematography handled by Sathish Murugan N. Ravi Murukaya has written the story, and has penned screenplay along with director Anucharan. Fire Karthik is the stunt choreographer, MR Rajakrishnan (Audiography), Murugan (Stills), M Sivakumar (Production Manager), Sameer Bharat Ram (Executive Producer) are the others in the crew.
Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது !
தமிழ் திரையுலக அன்பர்களுக்கு ஓர் இனிய செய்தி. தமிழ் திரைத்துறையில் உலகளவில் உள்ள ரசிகர்களை மயக்கும் அளவிலான, தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்பு மிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர் Dr. பிரபு திலக் அவர்கள், Lyca Productions தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுடன் இணைந்து, யோகி பாபு நடிப்பில் ஆவிகளை கொண்டு உருவாகியுள்ள காமெடி படமான “பன்னிக்குட்டி” படத்தினை தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகின்றார்.
11:11 Productions நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் இது குறித்து கூறியதாவது….
எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 Productions “பன்னிக்குட்டி” படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, Lyca Productions உடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம். 11:11 Productions எப்போதும் திரை ரசிகர்கள் இதயம் கனிந்து ரசித்து மகிழும் திரைப்படத்தை வழங்கி வருதில் மிகுந்த பெருமை கொள்கிறது. அந்த வரிசையில் பன்னி குட்டி திரைப்படமும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.
“பன்னிக்குட்டி” திரைப்படத்தை அனுசரண் இயக்கியுள்ளார். மற்றும் Lyca Productions தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு, உரிமையை 11:11 Productions டாக்டர் பிரபு திலக் பெற்றுள்ளார். யோகி பாபுவைத் தவிர்த்து, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு K இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்