உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மாதவன் நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படமான “மாறா” திரைப்படத்தை ஒளிபரப்பும்
கலர்ஸ் தமிழ்
~ காதலின் மாயாஜாலத்தை கண்டுரசிக்க வரும் ஞாயிறு 06, மார்ச் 2022, மாலை 4:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் ~

சென்னை, 3 மார்ச் 2022: வெற்றித் திரைப்படமான “மாறா” – ன் ப்ரீமியர் வரும் ஞாயிறன்று உலகளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதை அறிவிப்பதில் தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் மகிழ்ச்சியடைகிறது.

புதுயுக ரொமான்டிக் கதைக்களத்தைக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் மாதவன் மற்றும் சாரதா ஸ்ரீநாத் நடித்திருக்கின்றனர். ஒரு இளம் பெண்ணின் பயணத்தையும் மற்றும் ஒரு சுதந்திரமான உணர்வுகொண்ட ஓவியக்கலைஞனைக் கண்டறிந்து, அவரது வாழ்க்கையில் வரும் ஆபத்துகளை அகற்றுவதற்கான அவளது தேடலையும் இத்திரைக்கதை சித்தரிக்கிறது. 2022 மார்ச் 6, ஞாயிறு மாலை 4:30 மணிக்கு தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பப்படும் இத்திரைப்படம், கலர்ஸ் தமிழின் சண்டே சினி காம்போ நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக உங்கள் திரைகளுக்கே வழங்கப்படுகிறது.

திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த “மாறா” திரைப்படத்தில் கிஷோர், அபிராமி, எம்.எஸ். பாஸ்கர், மௌலி மற்றும் அப்புக்குட்டி என பல நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

நேர்மறையான, நல்ல உணர்வைத் தரும் இக்கதையானது, பார்வதி (சாரதா ஸ்ரீநாத்) என்ற மறுசீரமைப்பு கட்டிடக்கலைஞரை சுற்றி நகர்கிறது. வீட்டில் நிர்பந்திக்கப்படும் திருமண யோசனையை தவிர்க்கும் வகையில் கேரளாவில் ஒரு கடலோர சிறு நகரத்திற்கு ஒரு செயல்திட்டத்திற்காக பார்வதி பயணிக்கிறாள். அந்த சிறு நகரத்தில் பார்க்கும் இடத்தில் எல்லாம் காணப்படும் ஓவியம் மற்றும் கலைப்படைப்புகள் அனைத்தையும் மாறா (மாதவன் நடிப்பில்) என்ற பெயர் கொண்ட கலைஞர் செய்திருப்பதை பார்வதி அறிகிறாள். சுதந்திரமான உணர்வுகொண்ட கலைஞரும், வெவ்வேறு இடங்களுக்குப் பயணிப்பதில் ஆர்வம் கொண்டவருமான “மாறா” வாழ்க்கையில் சின்னஞ்சிறு விஷயங்களில் மகிழ்ச்சியைக் காணக்கூடியவர். மாறாவைக் கண்டறிவதற்காக பார்வதியின் பயணம் மற்றும் அவளது இத்தேடலின்போது அவள் சந்திக்கின்ற அனைத்து நபர்களையும் திரைக்கதையின் எஞ்சிய பகுதி பின்தொடர்கிறது.

தொலைக்காட்சியில் “மாறா” – ன் ப்ரீமியர் குறித்துப் பேசிய நடிகர் மாதவன். “எனது திரைப்பட பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருப்பதோடு, எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவும் “மாறா” திரைப்படம் இருக்கிறது. ஆத்மார்த்தமான மற்றும் புத்துணர்வு அளிக்கின்ற ஒரு மேஜிக்கல் கதையை உருவாக்கி இத்திரைப்படத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்காக இயக்குனர் திலீப் குமாருக்கு இத்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கண்களுக்கும், செவிகளுக்கும் ஒரு அற்புதமான விருந்தர்க இத்திரைப்படம் இருக்கும். இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகவும் ஆராவமுடனும் ஆசையுடனும் பணியாற்றியதே இப்படத்தின் வெற்றிக்கான காரணமாகும். சாரதாவின் நடிப்புத்திறனும் மற்றும் திரையில் இக்கதாபாத்திரத்தை ஜீவனுள்ளதாக கொண்டு வரும் அவரது திறனும் கண்ணிமையை மூடாமல் திரையோடு உங்களை ஒன்றவைக்கும் என்பது நிச்சயம். இந்த ஞாயிறன்று எனது குடும்பத்தோடு சேர்ந்து கலர்ஸ் தமிழில் இத்திரைப்படத்தைப் பார்க்க உங்களைப்போலவே நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் திலீப் குமார், சின்னத்திரையில் இத்திரைப்படம் முதன்முறையாக ஒளிபரப்பாவது குறித்து கூறியதாவது: “எனது இதயத்தில் “மாறா” திரைப்படம் எப்போதும் ஒரு சிறப்பு இடத்தை தக்கவைத்திருக்கும். கலர்ஸ் தமிழில், உலகத்தொலைக்காட்சி ப்ரீமியராக எனது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முதல் திரைப்படமான மாறா, உலகெங்கிலும் பல்வேறு தரப்பு மக்களால் பார்த்து ரசிக்கப்பட இருப்பது குறித்து நான் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன். ஒருங்கிணைந்த ஒரு குழுவாக இத்திரைப்படத்தை உருவாக்குவதற்கு நாங்கள் அதிக முயற்சிகளை எடுத்தோம். அதுவே இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம். இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்வையாளர்கள் தங்களோடு இணைத்துப்பார்த்து அடையாளம் காணவும் மற்றும் அதனோடு ஒன்றிய உணர்வைக் கொண்டிருக்கவும் இயலும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

நடிகை சாரதா ஸ்ரீநாத் இதுதொடர்பாக பேசுகையில், “கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “மாறா” திரைப்படம் உலக தொலைக்காட்சி ப்ரீமியராக வெளிவரவிருப்பது எனக்கு பெரும் உற்சாகமளிக்கிறது. பிரபல ஓடிடி தளம் ஒன்றில் குறுகிய காலத்திற்கு வெளியிடப்பட்டபோது இத்திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது. இதன் தொலைக்காட்சி ப்ரீமியர் உலகெங்கிலும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு எடுத்துச்செல்லும். இதற்காக கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதன் அற்புதமான ஒளிப்பதிவும், மனதை வருடும் இனிய இசையும், பார்க்கும் ஒவ்வொருவர் மனதில் பசுமையான பதிவை விட்டுச்செல்லும் என்பது நிச்சயம். சிறந்த திரைக்கதையும், நடிகர் மாதவனின் வசீகரமும் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும்,” என்று கூறினார்.

2022 மார்ச் 6. ஞாயிறு மாலை 4.30 மணிக்கு “மாறா” திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் சேனலை டியூன் செய்ய தவறிவிடாதீர்கள். அனைத்து முக்கிய கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு இரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here