Ayisha debuts as Velu Nachiyar Veeramangai

Ayisha excelled in sword fighting and horse riding!

Ayisha won the title of Miss Chennai in 2019. Ayisha, who is a combination of beauty and energy, is pursuing her academics with the objective of becoming a lawyer. Ayisha, who was very interested in the field of arts, also developed the aptitude for it.
He learned dance from Sridhar Master and learned fighting techniques from stunt masters- Thavasiraj and Miracle Michael. She underwent training for 6 months in the art of sword fighting and Silambam from Madurai Muthukamatshi.
Ayisha, who has youthful vibrancy and boldness, will soon make her Tamil film debut as Veeramangai.

Pasumpon Muthurama Linga Devar is being made as a biographical film on the National Leader. In this, Pasumpon Muthu Ramalinga Devar is played by J.M. who looks very much like the real-life Muthu Ramalinga Devar! After this movie J. M. Basheer is playing the role of the Periya Marudhu in the upcoming Marudhu Brothers biopic “Marudhu Square”.

Ayisha plays the role of Veeramangai Velu Nachiyar, the inspiration for Periya Marudhu and Chinna Marudhu!
It is worthwhile mentioning that Veeramangai Velu Nachiyar was the first Indian woman freedom fighter. For this historical character, Ayisha has undergone rigorous training in sword fighting and horse riding.

It is significant mentioning to note that Ayisha, who is playing Velu Nachiyar, is the daughter of J. M. Basheer, who is currently playing Pasumpon Muthuramalinga Devar in Desiya Thalaivar.

Marudhu Square is produced by J.M. Basheer on behalf of Trends Cinema Film Company at a big budget.

R. Aravindraj, who has directed successful films like Oomai Vizhigal, Uzhavan Magan, has now completed the film, Desiya Thalaivar and he will direct Marudu Square.

A famous composer is going to score the music.

Also, talks are going on with a famous actor to play Chinna Marudhu in the film. Apart from this, a huge star cast will be part of this big project.
The details of the cast and crew will be released by the film team soon…

After the release of the film “Desiya Thalaivar” in April 2023, the Queen of Sivaganga will inaugurate the film “Marudhu Square” at the present day Queen’s Palace at Sivaganga!

தேசிய தலைவர் திரைப்படத்தின் கதை நாயகன் ஜெ.எம். பஷீர் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் மருது ஸ்கொயர்..

வேலு நாச்சியார் வீரமங்கையாக அறிமுகமாகும் ஆயிஷா

வாள் சண்டை குதிரை ஏற்றம் பயிற்சியில் தேர்ந்தவர் ஆயிஷா

கடந்த 2019ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றவர் ஆயிஷா. அழகும், ஆற்றலும் ஒருங்கே அமைந்த ஆயிஷா வழக்கறிஞர் படிப்பு படித்து வருகிறார். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆயிஷா அதற்கான தகுதியையும் வளர்த்துக்கொண்டார்.
ஶ்ரீதர் மாஸ்டரிடம் நடனம் கற்றுதேர்ந்தவர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் தவசிராஜ், மிராக்கல் மைக்கேல் ஆகியோரிடம் சண்டைப் பயிற்சி பெற்றார். மதுரை முத்துகாமாட்சியிடம் வாள் சண்டை, சிலம்பாட்டம் போன்ற கலைகள் 6 மாத காலம் பயிற்சி பெற்று தேர்ந்தார்.
இளமை துடிப்பும், துணிச்சலும் கொண்ட ஆயிஷா விரைவில் தமிழ் திரைப்படத்தில் வீரமங்கையாக அறிமுகமாக உள்ளார்.

பசும்பொன் முத்துராம லிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது தேசியத் தலைவர். இதில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவராக அச்சு அசல் அவரைப் போலவே சாயல் கொண்ட ஜெ.எம். பஷீர் நடித்துள்ளார் . இப்படத்தையடுத்து ஜெ . எம். பஷீர், மருது சகோதரர்கள் வாழ்க்கை படமாக உருவாக விருக்கும் “மருது ஸ்கொயர்” என்ற படத்தில் பெரிய மருதுவாக நடிக்கிறார்.

பெரிய மருது, சின்ன மருதுவின் தலைவியாக திகழ்ந்தவரும் முதல் இந்திய பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை யாகவும் திகழ்ந்த வீரமங்கை வேலு நாச்சியார் வேடத்தில்தான் ஆயிஷா நடிக்கிறார். இந்த சரித்திர கதாபாத்திரத்திற்கு ஆயிஷா கடுமையான வாள் சண்டை பயிற்சி, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் முறைப்படி கற்றிருக்கிறார்.

வேலு நாச்சியாராக நடிக்க உள்ள ஆயிஷா தற்போது தேசிய தலைவர் படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்துள்ள ஜெ.எம் பஷீரின் மகள் என்பது குறிப்பிடத் தக்கது.

மருது ஸ்கொயர் படத்தை டிரெண்ட்ஸ் சினிமா பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்ட பொருட் செலவில் ஜெ.எம்.பஷீர் அவர்கள் தயாரிக்கிறார் .

ஊமை விழிகள், உழவன் மகன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய ஆர்.அரவிந்த்ராஜ் தற்போது தேசிய தலைவர் திரைப்படத்தை முடித்துவிட்டு.. மருது ஸ்கொயர் படத்தை இயக்க உள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் இசை அமைக்க உள்ளார்.

மேலும் இப்படத்தில் சின்ன மருதுவாக நடிக்க பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தவிர பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர்.
இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்,நடிகைகள் விபரம் விரைவில் படக்குழுவால் வெளியிடப்படும்…

வரும் ஏப்ரல் மாதம் “தேசிய தலைவர்” படம் வெளியான பின்னர் சிவகங்கை சீமையில் இன்றைக்கு இருக்கும் ராணியின் அரண்மனை யில் “மருது ஸ்கொயர்” படத்தை ராணி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here