Journalist Zia wrote and directed the short film ‘Kalva’. Released on King Pictures YouTube channel, this short film stars Vijay Sanduru, Atchaya and Kaka Gopal. Composed by Zatrix. Sharan has done the cinematography.
on behalf of Right Fingers Forum, Sengkol Awards for Social Workers, Entrepreneurs, Short Films held in Salem. ‘Kalva’ was selected as one of the 3 best Tamil short films. Zia received the Sengkol Award from the Film director Perarasu.
Regarding this, Zia said, ‘It is an honor to receive the Sengol Award for the film ‘Kalva’. ‘Kalva’ has won more than 30 awards so far. Thanks to the fans who supported my first short film’.
Founder of Right Fingers Farm Annadurai Chinnamuthu, ‘Niya Nana’ Gopinath, Guruji Siwatma and others participated in this function.
கள்வாவுக்கு செங்கோல் விருது
‘கள்வா’ குறும்படத்துக்கு செங்கோல் விருது சேலத்தில் வழங்கப்பட்டது.
பத்திரிகையாளர் ஜியா எழுதி, இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா’. கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த குறும்படத்தில் விஜய் சந்துரு, அட்சயா, காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ரைட் ஃபிங்கர்ஸ் ஃபார்ம் (Right fingers forum) சார்பில் தொழில் முனைவோர். சமூக சேவகர்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கு செங்கோல் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் 3 சிறந்த தமிழ் குறும்படங்களில் ஒன்றாக கள்வா தேர்வானது. இப்படத்துக்கு செங்கோல் விருதை இயக்குனர் பேரரசு வழங்க, ஜியா பெற்றுக்கொண்டார்.
இது குறித்து ஜியா கூறும்போது, ‘கள்வா படத்துக்கு செங்கோல் விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்ட விருதுகளை ‘கள்வா’ வென்றுள்ளது. எனது முதல் குறும்படத்துக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி’ என்றார்.
இந்த விழாவில் ரைட் ஃபிங்கர்ஸ் ஃபார்ம் நிறுவனர் அண்ணாதுரை சின்னமுத்து, ‘நீயா நானா’ கோபிநாத், குருஜி சிவாத்மா உள்பட பலர் பங்கேற்றனர்.