துர்காவுக்கு நெருங்கும் ஆபத்து – அடுத்தடுத்துவரும் சிக்கல்களில் இருந்து துர்காதப்பிப்பாளா?

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல்சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்தெய்வீக மெகாத்தொடர் “கெளரி”. மக்களிடையே நல்லவரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, கனக துர்கா அம்மன் சிலையின் சக்தி அடங்கிய பேழைக்குகௌரி பூஜை செய்து வருகிறாள். சக்தி வாய்ந்த இந்தபேழை, எல்லை காளியம்மன் கோவிலுக்கு கொண்டுசெல்லப்பட்டால் ஆவுடையப்பனுக்கு ஆபத்து என்பதால், அந்த பேழையை கடத்த காலன் பில்லி தேவதைகளை ஏவிவிடுகிறான்.

மறுபுறம், தன்னை கொல்ல தேதி குறித்த துர்காவை, திருவிழாவில் வைத்து தீர்த்து கட்டுவதாக போலீஸ்அதிகாரி சரவணப்பெருமாள், ஆவுடையப்பனிடம் சபதம்செய்கிறார்.
இவ்வாறான இக்கட்டான சூழலில், சக்திவாய்ந்த பேழைஎல்லை காளியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்படுமாபோலீஸ் அதிகாரி சரவணப் பெருமாள் அனுப்பும்ஆட்களிடம் இருந்து துர்கா தப்பிக்கிறாளா என்கிறகேள்விகளோடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.