கலைஞர் தொலைக்காட்சியின் மற்றொரு வித்தியாசமான படைப்பில் எஸ்.வி.சேகர் – ஷோபனா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் “மீனாட்சி சுந்தரம்” புத்தம் புதிய மெகாத்தொடர் வருகிற ஏப்ரல் 28 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
கதையின் முதன்மை கதாபாத்திரமான சுந்தரத்தின் மனைவி காலமான பிறகு, சுந்தரம் தனது இரண்டு மகன்களான பிரபு, அருள் மற்றும் தனது ஒரே மகளான வைஷ்ணவியுடன் கஸ்தூரி இல்லத்தில் வசித்து வருகிறார்.

இதில், சுந்தரத்துக்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. மறுபுறம், நாயகியான மீனாட்சி சுந்தரத்தை தீவிரமாக தேடி வருகிறாள். ஒரு வழியாக சுந்தரத்தை கண்டுபிடிக்கும் மீனாட்சி, சுந்தரத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறார்.

இறுதியாக, இவர்களது குடும்பத்துக்கு வரும் சிக்கல்கள் என்னென்ன? இந்த திருமணம் நடக்க காரணம் என்ன? போன்ற சுவாரஸ்யமான தேடல்களுடன் கதை விறுவிறுப்பாக தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here