இன்று சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போரூர் நார்சந்தியில் எங்கள் பொது மக்கள் உரிமை விழிப்புணர்வு இயக்கம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக SRMC காவல் சரக உதவி ஆணையர் திரு. ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் அவர்களும், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு. சந்திரசேகர் அய்யா அவர்களும், உதவி ஆய்வாளர் திரு. சத்தியமூர்த்தி அவர்களும், நிகழ்ச்சிக்கு உருதுணையாக வந்திருந்த அனைத்து காவல்துறை நண்பர்களுக்கும், நான் சமுதாய நலன் காக்கும் அக்கறையில் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து துணை நின்ற, சமுதாய அக்கறை கொண்ட மனிதநேயர்களான திருமதி. பூங்கொடி, திரு. வளசை செந்தில், திரு. மோகன்பாபு, திரு. ஜனார்த்தனன், திரு. பிரபு, திரு. எபிநேசர், திரு. வாசு, Dr.விஜயகுமார், செல்வி. சுசித்ரா, திரு. ஜெயராஜ், திரு.ரிஷி, திருமதி கவிதா, திரு. நவீன், செல்வி நந்தினி, பத்திரிக்கை நிருபர் திரு. கோபால், வழக்கறிஞர் திரு. ராஜேஷ் மற்றும் ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி. இந்த நிகழ்வில் உதவி ஆணையர் சிக்னலில் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொதுமக்களுக்கு ” Say No To Drugs”என்ற வாசகம் பொறித்த தொப்பியை வழங்கினார்.. பிறகு துண்டு அறிக்கையும் மக்களுக்கு விநியோகிக்க பட்டது, பிறகு விழிப்புணர்வு கோஷம் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தோம்.. இந்த விழாவை ஏற்பாடு செய்ததற்கும், தொப்பியை ஸ்பான்ஸர் செய்த நல் உள்ளங்களுக்கும் (திரு. KPK பாபு, திரு. ஜூலியன், திரு. G. K, திரு. ஸ்ரீதர், இத்தனை நல் உள்ளங்கள் துணை நின்றதை நினைத்து பெருமை அடைகிறேன்.. இப்படிக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அழகர் செந்தில், மாநில தலைவர், பொது மக்கள் உரிமை விழிப்புணர்வு இயக்கம்.